உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொழிற்சாலையால் பாதிப்பு இல்லை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

தொழிற்சாலையால் பாதிப்பு இல்லை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

மதுரை: திருமங்கலம் அருகே கொக்கலாஞ்சேரியில் கழிவு சுத்திகரிப்பு தனியார் தொழிற்சாலையை மூடக் கோரி 5 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டது தொடர்பாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மண்டலப் பொறியாளர் குணசேகரன் ஆய்வு செய்தார்.அவரது அறிக்கை:இத்தொழிற்சாலைக்கு 2023 செப்.,21 முதல் 2026 மார்ச் 31வரை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளிலிருந்து கோழிக்கழிவுகள் குளிர்பதன அறையில் சேமிக்கப்படுகிறது. ஆவியில் வேகவைத்த பின் புரோட்டின் பவுடராக மாறுகிறது. இது தாவரங்களுக்கு ஊட்டச்சத்தாக பயன்படுகிறது. தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் துர்நாற்றம், காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்த கொதிகலன், குக்கர் இடையே சேகரிப்பானுடன் இணைக்கப்பட்ட புகை போக்கி, ஈரஸ்கரப்புர் கொண்ட வடிப்பான் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. காற்று மாசு தடுப்பு சாதனங்கள் முறையாக இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. கோழி கழிவுகள் வேகவைக்கப்படும் இடம் தவிர வெளிப்புறங்களில் துர்நாற்றம் எதுவும் உணரப்படவில்லை. கெமிக்கல், மருத்துவக் கழிவுகள் கையாளப்படவில்லை. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி செயல்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை