உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதிப்பெண் சான்றிதழ் வழங்க நடவடிக்கை

மதிப்பெண் சான்றிதழ் வழங்க நடவடிக்கை

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை இணைப்புக் கல்லுாரிகளில் பயிலும் 18 ஆயிரத்து 607 இறுதியாண்டு மாணவர்களின்ஏப்., 2024 தேர்வுக்கானஒரு லட்சத்து 25ஆயிரத்து 26 விடைத்தாள்களுக்கான முடிவுகள் ஜூலை 5 ல் வெளியிடப்பட்து.அவற்றுள் 200 விடைத்தாள் முடிவுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் வரிசை எண் தவறுதலாகவோ அல்லது தேர்வில் கலந்து கொண்ட விபரத்தில் தெளிவின்மையோ அல்லது பாடக்குறியீடு தவறுதலாகவோ இருக்கலாம். கல்லுாரி தரப்பில் ஆதாரங்களுடன் சரிசெய்யப்படுகிறது. விரைவில் விடைத்தாள் சரிசெய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் சான்றிதழ் வழங்க பல்கலை நடவடிக்கை எடுக்கும் என பல்கலை தேர்வாணையர் பொறுப்பு தருமராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !