உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேங்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு

தேங்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு

அலங்காநல்லுார்: மதுரை மேற்கு ஒன்றியம் வாகைக்குளம் ஊராட்சியில் தெருவில் தேங்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இங்குள்ள 4 தெருக்களில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சில வீடுகளில் இருந்து பாசிங்காபுரம் ரோட்டில் கழிவுநீர் விடப்படுகிறது.அனைத்து தெருக்களிலும் உள்ள சாக்கடைகள் கிழக்கு தெரு சந்திப்பில் உள்ள துார்ந்து போன பாலத்தின் வழியாக ரோட்டை கடக்க முடியாமல் நடைபாதையில் தேங்குகிறது. பெயரளவில் கடந்து செல்லும் கழிவுநீரும் பகுதி ரோட்டோரம் தேங்கி சுகாதார சீர்கேடாக உள்ளது.கிழக்கு தெரு தேவியம்மாள் கூறுகையில், ''பத்தாண்டுக்கு முன்பு பாசன கால்வாயாக இருந்தது தற்போது கழிவுநீருக்கானதாக மாறி உள்ளது. மழை நேரம் கழிவுநீர் வெளியேற வழியின்றி வீடுகளின் முன் தேங்குகிறது. துர்நாற்றத்தால் சிரமப்படுகிறோம். தேங்கும் நீர் தானாக வடிந்தால் உண்டு. விஷ ஜந்துக்கள், புழுக்கள் வீடுகளுக்குள் படையெடுக்கின்றன. ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் நடவடிக்கை இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை