உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குப்பையாகும் பேட்டரி வாகனங்கள்

குப்பையாகும் பேட்டரி வாகனங்கள்

வாடிப்பட்டி: பரவை பேரூராட்சி 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மதுரை மெயின் ரோட்டில் ஏராளமான கடைகள், ஓட்டல்கள், மண்டபங்களும் உள்ளன.மதுரை நகர் பகுதிக்கு அருகே இருப்பதால் இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில் இப்பகுதி வீடுகளில் உள்ள குப்பையை சேகரிக்க சில ஆண்டுகளுக்கு முன் 20க்கும் மேற்பட்ட பேட்டரி ஆட்டோக்கள் வழங்கப்பட்டன.தற்போது 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் உரிய பராமரிப்பின்றி பேரூராட்சி வளாகத்தில் குப்பையாக வீணாகி வருகிறது. இதனால் குப்பை சேகரிக்கும் பணி பாதிக்கிறது.ரூ.பல லட்சம் மதிப்புள்ள இந்த வாகனங்களை பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ