உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிறுத்தமிருக்கு நிழற்கூடமில்லை

நிறுத்தமிருக்கு நிழற்கூடமில்லை

பேரையூர் : பேரையூர் - உசிலம்பட்டி ரோட்டில் மங்கல்ரேவு விலக்கு உள்ளது. இங்கு பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் நிழற்கூடம் இல்லாமல் இப்பகுதி மக்கள் அவதிப் படுகின்றனர். மங்கல்ரேவு, எஸ்.கோட்டைப்பட்டி, தொட்டனம்பட்டி, குடிச்சேரி, வீராளம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த விலக்கில் வந்து பஸ் ஏறுகின்றனர்.நிழற் கூடம் இல்லாததால் வெயிலிலும், மழையிலும் கால் கடுக்க நின்று பஸ் ஏற வேண்டிய அவல நிலை உள்ளது. இப்பகுதியில் பள்ளி, கல்லுாரிகள் அதிகம் உள்ளதால் மாணவர்கள், முதியோர் சிரமப்படுகின்றனர். பஸ் நிறுத்தத்தில் நிழற் கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி