| ADDED : ஆக 12, 2024 04:24 AM
மதுரை : 'அலைபேசியால் குழந்தைகளுக்கும் நமக்குமான இடைவெளி அதிகமாகி வருகிறது' என மதுரைவாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவை ஆண்டு விழாவில் கன்னியாகுமரி எம்.பி., விஜய் வசந்த் பேசினார்.பேரவைத் தலைவர் முத்தம்பெருமாள் தலைமை வகித்தார்.செயலாளர் கேசவன் வரவேற்றார். செயலாளர் கண்ணன் ஆண்டறிக்கை, பொருளாளர் செல்வன்நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தனர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் தாயுமானசுவாமி விழா மலரை வெளியிட, போடிநாயக்கனுார் சி.பி.ஏ., கல்லுாரி முன்னாள் கணிதத்துறைத் தலைவர் இளங்கோபெற்றார். பேச்சு, பாட்டு, மாறுவேடம் போட்டியில் வென்ற, 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மதுரை மருத்துவக்கல்லுாரிமருந்தியல் துறை டாக்டர் சுதா லட்சுமி பரிசு வழங்கினார். சிவகங்கை ஏ.டி.எஸ்.பி., கலைக்கதிரவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில் விஜய் வசந்த் எம்.பி., பேசியதாவது:நம்முடைய கடுமையான உழைப்பும், ஒற்றுமையுமே ஆளும் திறனை நமக்கு வழங்குகிறது. குமரி மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற கனவோடு இருந்த நான், உங்கள் நலனுக்காக எப்போதும் இருப்பேன். இன்று தவழும் குழந்தைகளின் கைகளில் கூட அலைபேசி தவழ்கிறது. சொந்த பந்தங்களை ஒதுக்கி அலைபேசியை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்வதால், குழந்தைகளுக்கும், நமக்குமான இடைவெளி அதிகமாகி வருகிறது. நம் மண்ணின் பெருமையை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வது நம் கடமை என்றார்.செயலாளர் கண்ணன் நன்றி கூறினார். செயலாளர் ஜெயந்தி, துணைத் தலைவர் பகவதிகலா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பொதுச் செயலாளர் சந்திரசேகரன் விழாவை ஒருங்கிணைத்தார். அமைப்புச் செயலாளர் சஜீவ் பங்கேற்றனர்.