| ADDED : ஆக 13, 2024 06:15 AM
திருமங்கலம் : தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி, சிலம்பம் அசோசியேஷன் ஆப் இந்தியா, இன்டர்நேஷனல் சிலம்பம் கமிட்டி, திருமங்கலம் பொதிகை சிலம்பம் பள்ளி ஆகியவை இணைந்து 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சாதனை முயற்சியை மேற்கொண்டன.போதைப் பொருள் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தல்என்ற தலைப்பில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றனர். வலது கையில் தேசிய கொடியுடன், இடது கையால் சிலம்பம்சுழற்றி புதிய நோபல் உலக சாதனையை திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நடத்தினர்.இந்திய சிலம்பம் சங்க தலைவர் முகமது சிராஜ் அன்சாரி, பொதுச்செயலாளர் தியாகு நாகராஜன், தொழில்நுட்ப இயக்குனர் பாக்கியராஜ் பங்கேற்றனர். காலை 7:20 மணிக்கு தொடங்கிய சாதனை முயற்சி 9:30 மணிக்கு நிறைவடைந்தது.