| ADDED : நவ 13, 2025 12:36 AM
மதுரை: மதுரையில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் 110 பேர் கைது செய்யப்பட்டனர். அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக அடிப்படை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் கல்வித்தகுதி அடிப்படையில் பணிநியமனம் வேண்டும். வி.ஏ.ஓ.,வில் இருந்து அடுத்த நிலை பதவி உயர்வு பெற பத்தாண்டு பணிநிறைவு என்பதை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். வருவாய்த்துறை காலியிடங்களை 50 சதவீதம் கிராம உதவியாளருக்கான பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் மாநில செயலாளர் சோலையன் துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் சாக்ரடீஸ் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் வீரணன், கரந்தமலை, பாலசுப்பிரமணியன், பால்பாண்டி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அழகேசன் விளக்கி பேசினார். மாநில துணைத் தலைவர் மாரியப்பன், செயலாளர் வளர்மதி, அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சின்னப்பொன்னு, வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜெயகணேஷ், சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், வணிகவரித்துறை கல்யாணசுந்தரம் உட்பட பலர் பேசினர். மறியலில் ஈடுபட்ட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.