| ADDED : ஜன 15, 2024 11:46 PM
சேதமடைந்த பாதாள சாக்கடை மூடிமதுரை மாநகராட்சி 10 வார்டு கடச்சனேந்தல் அந்தநேரி டி.ஆர்.நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்துள்ளது. விபத்துக்கு முன் சரிசெய்ய வேண்டும். -- நாராயணன் அந்தநேரி மாடுகள் தொல்லை மதுரை பழங்காநத்தம் உழவர் சந்தையில் மாடுகள் உலா வருகின்றன. இதனால் பெண்கள் காய்கறி வாங்க செல்ல முடியவில்லை. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பாலகிருஷ்ணன், பழங்காநத்தம் ரோட்டில் ஓட்டல் கழிவு நீர்மதுரை மாநகராட்சி 74வது வார்டு மஹால் ரோடு பஸ் ஸ்டாப் அருகில் ஓட்டல் கழிவு நீர் ரோட்டில் ஓடுகிறது.இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நடவடிக்கை தேவை.-- தில்லை, கீழவாசல் கரடுமுரடான ரோடுமதுரை மாநகராட்சி 22 வது வார்டு சூசைநகர் 2 வது தெருவில் ரோடு அமைக்க கற்கள் பரப்பி பல நாட்களாகியும் சரிசெய்யப்படவில்லை. இதனால் நடந்து கூட செல்லமுடியாத நிலை உள்ளது.- மேரி, சூசை நகர்* கோவில்பாப்பாகுடியிலிருந்து விளாங்குடி செல்லும் ரோடு குண்டும்குழியுமாக உள்ளது. மாணவர்கள்,வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். -- கிருஷ்ணமூர்த்தி, கோவில்பாப்பாகுடி அதிக கட்டணம் வசூல்மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் கட்டண கழிப்பறையில் அதிக கட்டணம் வசூல் செய்வதால் நுழைவாயில் பகுதியை அசுத்தம்செய்கின்றனர். துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் அபாயம்உள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- ஜெயராம், மேலமாசி வீதிநோயாளிகள் அவதிமதுரை அரசு மருத்துவமனையில் டாக்டர் எழுதி கொடுக்கும் நாட்களுக்கு மாத்திரைகள் வழங்குவதில்லை. நீண்டநேரம் காத்திருப்தோடு அடிக்கடி மாத்திரை வாங்க மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. - பாலமுருகன், சந்தைப்பேட்டை குப்பையை அகற்ற வேண்டும்மதுரை தெற்காவணி மூலவீதி வெள்ளியம்பலம் தெருவில் தொடர்ந்து குப்பை அள்ளப்படாமல் உள்ளதால் தொற்று நோய் அபாயத்தில் இப்பகுதியினர் உள்ளனர். - கார்த்திக், மதுரை