உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...

குண்டு குழி ரோடு

மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் அரசு மருத்துவமனை ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.- ரவி, கரும்பாலை, மதுரை

சேதமான பாலம்

திருமங்கலத்தில் இருந்து டி.கல்லுப்பட்டி செல்லும்ரோட்டில் உள்ள பாலத்தின் மீது அமைத்த தார் பகுதி சேதமடைந்து பள்ளமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து நடந்து விடுகிறது. சரி செய்ய நடவடிக்கை தேவை.- செந்தில் திருமங்கலம்

குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம்

மதுரை யாதவர் கல்லுாரி குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பு பகுதியில் அடிக்கடி பன்றிகள் இறந்து கிடக்கின்றன. இதனால் இவ்வழியே செல்ல முடியவில்லை துர்நாற்றம் வீசுகிறது. உடனே சரிசெய்ய வேண்டும். - பாண்டியன், திருப்பாலை

வாகனங்களை அகற்றுக

மதுரை கோச்சடை பகுதிலிருந்து மேலக்கால் செல்லும் மெயின் ரோட்டில் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர். இதனால் ரோடு குறுகலாகவும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.-ராஜன், கோச்சடை

குடிநீரில் சாக்கடை

மதுரை மாநகராட்சி வார்டு 63 வ.உ.சி. மெயின்ரோடு பி.பி. சாவடி பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. புதிய கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கருப்பசாமி, பி.பி.சாவடி

மோசமான ரோடு

மதுரை எஸ்.எஸ்.காலனி ரோடு அமைக்கும் பணிக்காக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 5 மாதங்களாகியும் இன்றுவரை ரோடு அமைக்காததால் நடந்து கூட செல்ல முடியவில்லை. விரைவில் சாலை அமைக்க வேண்டும்.- மகேஸ்வரன், எஸ்.எஸ்.காலனி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை