உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு ஆதார் முகாம்

மாணவர்களுக்கு ஆதார் முகாம்

மதுரை : மதுரையில் கிழக்கு ஒன்றியம் ஒத்தக்கடை அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான ஆதார் பதிவு, புதுப்பித்தல் முகாமை சி.இ.ஓ., கார்த்திகா துவக்கி வைத்தார். உதவித் திட்ட அலுவலர்கள் கார்மேகம், சரவண முருகன், ஊராட்சி தலைவர் முருகேஸ்வரி, எல்காட் அலுவலர் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சி.இ.ஓ., கார்த்திகா பேசுகையில் மாவட்டத்தில் 10,570 மாணவர்களுக்கு ஆதார் பெறுதல், புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக 'எல்காட்' நிறுவனத்துடன் இணைந்து இம்முகாம்கள் பள்ளிகளில் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் பயன்பெற்றுக்கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி