| ADDED : நவ 22, 2025 04:30 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் அ.தி.மு.க., வடக்கு ஒன்றியம் சார்பில் 9 பேர் கொண்ட பூத் கமிட்டி பாக பொறுப்பாளர்கள் பயிற்சி முகாம், ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் ஆலோசனை வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், மாணிக்கம், கருப்பையா, எஸ்.எஸ். சரவணன், தமிழரசன் முன்னிலை வகித்தனர். பாசறை மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், பேரவை துணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, விவசாய அணி குமார், ஜெயச்சந்திரமணி, தகவல் தொழில்நுட்பம், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் அழகர்சாமி, செந்துார் பாண்டி, காசிநாதன், சந்திரபோஸ் பங்கேற்றனர்.