| ADDED : ஆக 13, 2024 09:28 AM
மதுரை: ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கு பெரு வழிகாட்டியாக விளங்கியவர் ஆண்டாள் என பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்திரராஜன் தெரிவித்தார்.மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் அனுஷம் வைபவத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி மதுரை எஸ்.எஸ். காலனி எஸ்.எம்.கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் எழுத்தாளர் இந்திரா சவுந்திரராஜன் பேசியதாவது: ஆண்டாள் ஒரு காரண பெயர். ஆட்சி செய்கிற தன்மையை நாம் உணர்கின்றோம்.தேவர்களுக்குரிய காலம்
ஆண்டாள் ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கு பெரு விளங்கியவர். மார்கழி மாதம் தேவர்களுக்குரிய காலம்.தேவர்களை திருப்தி செய்வதற்காக வேள்வி கண்டிப்பாக ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்கிறார் மகா பெரியவர்.வேதம் மந்திரம் வேள்வி பூஜை போன்றவை நம் சந்தோசமாக இருப்பதற்கு காரணமான ஒன்று என்கிறார் மகா பெரியவர். பிரதோஷ வேளையில் நாம் பிரார்த்தனை செய்தால், நம்முடைய தோஷங்களை நீக்குவதற்கு கொடுத்த சந்தர்ப்பம். புண்ணிய நதி
மார்கழி முழுவதும் 30 நாள் கோவிலுக்கு சென்று பெருமாள் கோவிலில் கொடுக்கிற தீர்த்தம் அருந்தினால் அதுவே நமக்கு மிகப்பெரிய அருமருந்து. நம் நாட்டில் ஆறுகள் வெறும் நீரோட்டம் அல்ல. அது புண்ணிய நதி. இவ்வாறு எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.