உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடிநீரில் கலப்பது இரும்பு, சுண்ணாம்பு சத்துக்களா நடவடிக்கை எடுப்பீர்களா அதிகாரிகளே

குடிநீரில் கலப்பது இரும்பு, சுண்ணாம்பு சத்துக்களா நடவடிக்கை எடுப்பீர்களா அதிகாரிகளே

மேலுார்: கிடாரிப்பட்டியில் சிதிலமடைந்த மேல்நிலை தொட்டியின் சிமென்ட் காரை பெயர்ந்தும், துருப்பிடித்த இரும்பின் துகள்கள் உதிர்ந்தும் கலந்த குடிநீர் விநியோகிப்பதால் மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது. கிடாரிப்பட்டி ஊராட்சி அலுவலக வளாகத்தில் 1984 ல் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலைதொட்டி கட்டப்பட்டுள்ளது. இத்தொட்டி மூலம் போர்வெல், காவிரி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தொட்டி முறையான பராமரிப்பு இல்லாததால், அதன் உள்பகுதி, வெளிப்பகுதி, துாண்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்தும், கம்பிகள் துருப்பிடித்தும் காணப்படுகிறது. தொட்டியின் உள்பகுதியில் குடிதண்ணீருக்குள் சிமென்ட் பூச்சுகள், துருப்பிடித்த கம்பிகளின் துகள்கள் உதிர்வதால் தண்ணீரை பயன்படுத்தும் மக்கள் பலவிதமான தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தொட்டியை சுத்தம் செய்வோர் ஊராட்சி அலுவலகத்திற்கு வருவோர், குடியிருப்போர் மீதும் அவ்வப்போது சிமென்ட் பூச்சுகள் விழுவதால் காயமடைகின்றனர். தொட்டி உடைந்து உயிர் பலி ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் இவ் விஷயத்தில் தலையிட்டு புதிய தொட்டி கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை