உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  குன்றத்து மலைமேல் தீப மண்டபத்தில் தடுப்புகள்

 குன்றத்து மலைமேல் தீப மண்டபத்தில் தடுப்புகள்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமேல் உச்சிப் பிள்ளையார் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் தாமிர கொப்பரை வைத்து கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீப மண்டபத்தின் மேல்பகுதிக்கு செல்ல படிக்கட்டுகள் உள்ளன. அவை செங்குத்தாகவும், குறுகலாகவும், கைப்பிடியின்றியும் உள்ளதால் தீபக் கொப்பரை, பூஜை பொருட்கள் கொண்டு செல்ல சிரமமாக உள்ளது. மோட்ச தீபம் ஏற்ற வருபவர்களும் சிரமம் அடைகின்றனர். சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா கூறுகையில், ''இரும்பு தடுப்புகள் அமைக்கவும், தீப மண்டபத்திலுள்ள விரிசலை சீரமைக்கவும், பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை