உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரோடுகளில் உலா வரும் கால்நடைகள்

ரோடுகளில் உலா வரும் கால்நடைகள்

அலங்காநல்லுார், : மதுரை அலங்காநல்லுார் ரோடு சிக்கந்தர் சாவடியில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.இப்பகுதியில் கோவில்பாப்பாகுடி, அதலை, பொதும்பில் வயல்வெளிகள் குடியிருப்பு விரிவாக்க பகுதிகளாக மாறி வருகின்றன. இந்நிலையில் அலங்காநல்லுார் மெயின் ரோட்டில் காய்கறிகள், பழங்கள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட உணவுகளை தேடி மாடுகள் படையெடுக்கின்றன. இதில் ஜல்லிக்கட்டு காளைகளும் உள்ளன. இவற்றுக்கிடையே ஏற்படும் மோதல்களால் சாலையை பயன்படுத்தும் பாதசாரிகள், வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இரவு நேரங்களில் விபத்துகளும் அரங்கேறி விடுகிறது. ரோட்டில் உலவும் கால்நடைகளை பிடிக்கவும், உரிமையாளருக்கு அபராதம் விதிக்கவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை