உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், விளாச்சேரி கால்நடை மருத்துவமனைகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் நேற்று துவங்கியது. ஜன.,15ல் அவனியாபுரம், ஜன.,16 பாலமேடு, ஜன.,17 அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. இதில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் வழங்கும் பணி நேற்று துவங்கியது. விளாச்சேரி கால்நடை மருத்துவமனையில் டாக்டர் சிவக்குமார் பரிசோதித்து சான்றிதழ் வழங்கினார். சான்றிதழ் அடிப்படையில் காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படும்.

என்னென்ன விதிகள்

காளைகள் நாட்டு இனமாக இருத்தல் வேண்டும். 4 பற்கள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 132 செ.மீ., உயரத்துடன் இருக்க வேண்டும். 3 -8 வயதிற்குள் இருக்க வேண்டும். காணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். திமில் இருக்க வேண்டும். காயங்கள் இருக்கக்கூடாது, நோயுற்ற காளைகள், உடல் மெலிந்த காளைகளுக்கு தகுதி இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை