உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு மருத்துவமனையில் விஷ முறிவு பிரிவு இருந்தும் பயனில்லை; பயிற்சி பெற்ற சிறப்பு டாக்டர்கள் ரிஸ்க் எடுக்க தயக்கம்

அரசு மருத்துவமனையில் விஷ முறிவு பிரிவு இருந்தும் பயனில்லை; பயிற்சி பெற்ற சிறப்பு டாக்டர்கள் ரிஸ்க் எடுக்க தயக்கம்

கம்பம் பள்ளத்தாக்கில் சமீபமாக பாம்பு கடியால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. லோயர்கேம்ப், சுருளியாறு மின் நிலையம், அப்பகுதி தோட்டங்கள், விவசாய வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள்,பூப்பறிக்க அதிகாலையில் பூந்தோட்டங்களுக்கு செல்பவர்களை பாம்பு கடித்து பலரும் பலியாகி வருகின்றனர். கம்பம் அரசு மருத்துவமனையில் விஷமுறிவு சிகிச்சை பிரிவு இருந்தும் பாம்பு கடியால் பாதித்து வருபவரை தேனி மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்புவதை வாடிக்கையாக உள்ளது. இங்கிருந்து செல்ல ஒரு மணி நேரமாகும். அதற்குள் உயிர் பறிபோக அதிக வாய்ப்புள்ளது. பாம்பு கடிக்கு செலுத்த கூடிய ஏ. எஸ்.வி. ( ஆண்டி ஸ்நேக் வீனம் ) என்னும் ஊசி மருந்து கம்பம் மருத்துவமனையில் இருந்தும் மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்புவது வேதனையானது. சமீபத்தில் நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்த ஒருவர் பாம்பு கடிபட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு வந்த போது, அவரை தேனி மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பியதில் அவர் பலியானார். அடுத்த நாள் இரவு லோயர் கேம்ப்பிலிருந்து மணிகண்டன் என்பவர் பாம்பு கடி பட்டு வந்த வரையும் மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பினர். அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கு கடந்த மே யில் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பாம்பு கடிக்கு சிகிச்சையளிப்பது எப்படி என்ற பயிற்சி வழங்கப்பட்டது. ஆனால் பயிற்சியால் பயனில்லை. இதே நிலைதான் மற்ற அரசு ஆஸ்பத்திரிகளிலும் நிலவுகிறது.டாக்டர்கள் கூறுகையில், பாம்பு கடி பாதிக்கப்பட்டவருக்கு முதலில் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். அதில் ரத்தம் உறையும் நேரம், வெளியேறும் நேரம் கண்காணித்து அதன் அடிப்படையில் ஊசி மருந்து செலுத்த வேண்டும். அந்த நேரத்தில்அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் பதட்டத்தில் இருப்பதால் எச்சரிக்கையுடன் சிகிச்சையளிக்க வேண்டும். இதனால் டாக்டர்கள் 'ரிஸ்க்' எடுக்க பயந்து தேனி மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்புகின்றனர் என்றார். கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பாம்பு கடியில் பலர் உயிரிழக்கின்றனர். எனவே விஷ முறிவு சிகிச்சை பிரிவை முழு அளவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நலப்பணிகள் இணை இயக்குனர் கம்பம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை