உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடும்பத்தினருடன் கைதிகள் வீடியோ காலில் பேசும் வசதி

குடும்பத்தினருடன் கைதிகள் வீடியோ காலில் பேசும் வசதி

மதுரை : தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் உறவினர்களின் அலைச்சல், காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் மற்றும் மாவட்ட சிறைகளில் கைதிகளை உறவினர்கள குறிப்பிட்ட நாட்களில் சந்தித்து பேசி வருகின்றனர். இதற்காக காலை முதல் சிறைக்கு வந்து காத்திருக்கும் சூழல் இருந்த நிலையில் மதுரை உள்ளிட்ட சில சிறைகளில் குறிப்பிட்ட நாள், நேரத்தில் சந்திக்க 'அட்வான்ஸ் புக்கிங்' செய்யும் வசதி அமலில் உள்ளது. அதேசமயம் வரமுடியாத சூழலில் குடும்பத்தினருடன் கைதிகள் 6 நாட்களுக்கு ஒருமுறை 9 நிமிடங்கள் பேச அனுமதிக்கப்படுகின்றனர்.அடுத்த முயற்சியாக குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கைதிகள் குடும்பத்தினர் பேச உள்ளனர். 3 நாட்களுக்கு ஒருமுறை 12 நிமிடங்கள் கைதி பேசலாம். பாதுகாப்பு கருதி சிறை நிர்வாகத்தால் பதிவு செய்யப்படும். சிறை காவலர்களும் கண்காணிப்பர். மாவட்ட சிறைகளிலும் இவ்வசதி அமைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை