உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலி வழக்கறிஞர்களை ஊக்குவிக்கக்கூடாது: நீதிபதி பேச்சு

போலி வழக்கறிஞர்களை ஊக்குவிக்கக்கூடாது: நீதிபதி பேச்சு

மதுரை : சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன். இவர் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் பிரிவு உபசார பாராட்டு விழா நடந்தது. பெண் வழக்கறிஞர் சங்க தலைவர் ஆனந்தவள்ளி வரவேற்றார்.வைத்தியநாதன் பேசியதாவது: எனது கடமையை சரியாக நிறைவேற்றி, பாரபட்சமின்றி தீர்ப்புகளை அளித்துள்ளேன். வழக்கு தாக்கல் செய்வதற்கு முன் சமரச மையத்தை நாட வேண்டும். போலி வழக்கறிஞர்களை ஊக்குவிக்க வேண்டாம். இதனால் திறமையான வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சால்வை, மாலை அணிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் வீரகதிரவன், பாஸ்கரன், வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் அழகுராம்ஜோதி, ஆயிரம் கே.செல்வகுமார், அன்பரசு, கிருஷ்ணவேணி, வெங்கடேசன், ராமகிருஷ்ணன், கார்த்திகேயன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை