உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தடகள வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்

 தடகள வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்

மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ. 24 காலை 8:00 மணிக்கு 14 வயது, 16 வயதுக்குட்பட்ட வீராங்கனைகளுக்கான தடகளப் போட்டி நடக்கிறது. அகில இந்திய தடகள சங்கம், மத்திய விளையாட்டு சம்மேளனம் இணைந்து 'அஸ்மிதா' என்ற பெயரில் மகளிருக்கான தடகளப் போட்டிகளை நடத்துகிறது. இந்தியாவில் உள்ள 300 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள 14, 16 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 'டிரையத்லான் ஏ' பிரிவில் 60 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகளும் 'டிரையத்லான் பி' பிரிவில் 60 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், 'சி' பிரிவில் 60 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், 600 மீட்டர் ஓட்டப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 'கிட்ஸ்' பிரிவில் ஈட்டி எறிதல் நடக்கிறது. ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும். அனுமதி இலவசம். ஆன்லைன் மூலம் sfw.kheloindia.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு சங்கம், சம்மேளனம் மூலம் சலுகைகள் வழங்கப்படும். இத்தகவலை மதுரை மாவட்ட தடகள சங்க செயலாளர் உஸ்மான் அலி தெரிவித்துள்ளார். தொடர்புக்கு : 94459 55448.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி