மேலும் செய்திகள்
யோகாவில் சாதனை பா.ஜ., பாராட்டு
2 minutes ago
விழிப்புணர்வு ஊர்வலம்
7 minutes ago
மண்ணை மலையாக்கும் கார்த்திகை திருவிழா
10 minutes ago
மின்திருட்டுக்கு அபராதம் அதிகாரிகளுக்கு மிரட்டல்
25 minutes ago
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவத் துறை சார்பில் 2025 ஜனவரி முதல் நவம்பர் வரை, 1638 பேருக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக டீன் அருள் சுந்தரேஷ்குமார் தெரிவித்தார். உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவில் பங்கேற்ற டீன் 20 பேருக்கு செயற்கை அவயங்களை வழங்கினார். அவர் பேசியதாவது: உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவத் துறை சார்பில் 2025 ஜனவரி முதல் நவம்பர் வரை, 1638 பேருக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கியுள்ளோம். மாநில அளவில் அதிக சான்றிதழ் வழங்கி முதலிடத்தில் உள்ளோம். மேலும் 775 விபத்துச் சான்றிதழ் வழங்கியுள்ளோம். கை, கால்களை இழந்தவர்களுக்காக மருத்துவமனையிலேயே செயற்கை அவயங்கள் தயாரிக்கிறோம். 'பிராஸ்தடிக், ஆர்த்தடிக்' தொழில்நுட்ப வல்லுனர்களின் மூலம் நோயாளிகளின் உடல் தேவையறிந்து அதற்கேற்ப 586 அவயங்கள் வழங்கியுள்ளோம். முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 129 பேருக்கு செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டுள்ளது. 35 ஆயிரத்து 602 பேருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்துள்ளோம். இதன் மூலம் மாநில அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சேவையில் மதுரை அரசு மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது என்றார். துறைத்தலைவர் ராமநாதன், உதவி பேராசிரியர்கள் வரதராஜன், சிந்தியா, முடநீக்கியல் துறைத் தலைவர் பதியரசக்குமார், மருத்துவ கண்காணிப் பாளர் குமரவேல், நிலைய மருத்துவ அலுவலர் முரளிதரன் கலந்து கொண்டனர்.
2 minutes ago
7 minutes ago
10 minutes ago
25 minutes ago