மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பாஸ் டிசம்பர் வரை செல்லும்
2 hour(s) ago
மதுரை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் கட்டணமில்லா பயண சலுகை அட்டைகள் மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2024 - 25ம் ஆண்டுக்கு மார்ச் 31 வரை வழங்கப்பட்ட இலவச பஸ்பாஸ் பயண சலுகை அட்டையை, இக்காலத்திற்கும் கூடுதலாக அனுமதித்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை மூலம்அறிவுறுத்தப்பட்டது. இந்த அட்டையை மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் டிச.31 வரை அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது என மேலாண் இயக்குனர் சரவணன் தெரிவித்துள்ளார்.
2 hour(s) ago