உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  உடைந்த குடிநீர் குழாய்களால் காந்தி கிராம மக்கள் அவதி

 உடைந்த குடிநீர் குழாய்களால் காந்தி கிராம மக்கள் அவதி

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் கல்லணை ஊராட்சி காந்தி கிராமம் பழைய காலனி பட்டாளம்மன் கோயில் தெருவில் கட்டப்பட்ட 7 அடி ஆழ கழிவுநீர் வடிகால், உடைந்த குடிநீர் குழாய்களால் பொது மக்கள் பாடு திண்டாட்டமாகி வருகிறது. இந்தத் தெரு தனிச்சியம் -அலங்காநல்லுார் மெயின் ரோடு அருகே செல்லும் மேட்டுப் பகுதி. இத்தெருவை கடந்தால் மற்றொரு தெரு தாழ்வாக உள்ளது. இதனிடையே கழிவுநீர் மெயின் ரோட்டுக்கு வரும் விதமாக ஓராண்டுக்கு முன் ஏற்கனவே இருந்த வடிகாலை அகற்றி, கூடுதலாக 7 அடி ஆழத்தில் கட்டிய வடிகால்கள் மூடப்படாமல் உள்ளன. அப்பகுதி பாப்பா, சந்தியா, லட்சுமி கூறியதாவது: வடிகாலை இவ்வளவு ஆழத்திற்கு ஏன் கட்டுகிறீர்கள் எனக் கேட்டபோது அப்போதுதான் கழிவுநீர் செல்ல வாட்டம் உள்ளது. அதை சிமென்ட் சிலாப் மூலம் மூடிவிடுவோம் எனவும் தெரிவித்தனர். ஆனால் இன்றுவரை மூடவில்லை. இதுவரை வடிகாலுக்குள் குழந்தைகள், முதியோர் 5 பேர் தவறி விழுந்துள்ளனர். ஆறு மாதத்திற்கு முன் விழுந்து காயமான மூதாட்டி உயிரிழந்து விட்டார். இப்பதியில் அடுத்தடுத்து குடிநீர் குழாய்கள் உடைந்து ஓராண்டாக தண்ணீர் வீணாகிறது. ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பக்கத்து வீட்டுக் குழாயில் தண்ணீர் பிடிப்பது போதுமானதாக இல்லை. வடிகால்கள் சுத்தம் செய்யப்படாததால் சுகாதாரம் பாதித்துள்ளது. சுகாதாரம் பேண ஒன்றிய நிர்வாகம் வடிகாலை சிலாப் மூலம் மூட வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ