உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கழிவுநீரால் சுகாதாரக்கேடு

 கழிவுநீரால் சுகாதாரக்கேடு

பேரையூர்: டி.கல்லுப்பட்டி ஒன்றியம் அம்மாபட்டியில் சாக்கடை கழிவு நீர் செல்ல வழி இல்லாததால் குடியிருப்பு பகுதிக்குள் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக் கேடும் ஏற்பட்டுள்ளது. குடியிருக்கும் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகமாகி நோய் தொற்று பரவுகிறது. பலர் மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். * சாப்டூரிலும் சாக்கடை கழிவு நீர் செல்ல வழி இல்லாததால் குடியிருப்பு பகுதிக்குள் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்தும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ