மேலும் செய்திகள்
சென்னையில் ரூ.8,000 கோடியில் கன்டெய்னர் முனையம்
21-Mar-2025
திருமங்கலம் : திருமங்கலம் கப்பலுார் மேம்பாலத்தில் அதிவேக கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. லாரியும், கன்டெய்னரும் தனித்தனியாக ரோட்டை அடைத்தபடி கிடந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பொள்ளாச்சியில் இருந்து துாத்துக்குடி துறைமுகத்திற்கு, தேங்காய் நார் பொருட்களை ஏற்றிய கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று காலை 9:30 மணிக்கு திருமங்கலம் கப்பலுார் மேம்பாலத்தில் மாட்டுத்தாவணி ரிங் ரோடு செல்லும் பாதையில் சென்றது. லாரியை பாளையங்கோட்டை டிரைவர் தங்கராஜ் 37, ஓட்டி வந்தார்.அதிவேகமாக வந்த லாரி கப்பலுார் மேம்பாலத்தில் ரிங் ரோடு செல்லும் பாதையில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. ரோட்டோர தடுப்புகளை உடைத்துக் கொண்டு லாரியும், கன்டெய்னரும் தனித்தனியாக பிரிந்து விழுந்தன. டிரைவர் தங்கராஜ் காயமடைந்தார். அவர் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.போக்குவரத்து நெரிசல் மிகுந்த தேசிய நெடுஞ்சாலையில் நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் வாகனங்கள் வராததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணைய நெடுஞ்சாலை விபத்து மீட்பு பிரிவினர், போலீசார் உடனே கவிழ்ந்த லாரியையும், கன்டெய்னரையும் கிரேன் உதவியோடு மீட்டு அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் கப்பலுார் ரிங் ரோடு பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
21-Mar-2025