உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் பிராமண சமுதாயத்திற்கு ஆதரவாக ஜன.5ல் உண்ணாவிரதம் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவிப்பு

மதுரையில் பிராமண சமுதாயத்திற்கு ஆதரவாக ஜன.5ல் உண்ணாவிரதம் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவிப்பு

மதுரை : 'ஜன. 5ல் பிராமண சமுதாயத்திற்கு ஆதரவாக ஹிந்து மக்கள் கட்சி சார்பில் மதுரையில்உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும்' என அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் செய்தும், அச்சமூக பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தியும், 'திராவிட மாடல்' பெயரில் பிராமணர்களை தொடர்ந்து அவமதிக்கின்றனர். அவற்றை கண்டித்து நவ.,3ல் பிராமண சமுதாயத்தை பாதுகாக்க தனிச் சட்டம் வேண்டி சென்னையில் பேரணி நடத்தப்பட்டது.ஐயப்பனுக்கு விரதமிருந்து புனித யாத்திரை மேற்கொள்வதை இழிவுபடுத்திப்பாடியஇசைவாணி மீது புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பிராமணர்கள், ஈஷா யோக மையம் ஜக்கி வாசுதேவ் ஆகியோரை இழிவுபடுத்தி நக்கீரன் கோபால் தொடர்ந்து பேசி வருகிறார். அவரைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஹிந்து மக்கள் கட்சி இளைஞர் அணியின் ஓம்கார் பாலாஜி, பள்ளியில் பாவ புண்ணியங்கள் பற்றிப் பேசிய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டனர். அரசின் தவறுகளை சுட்டிக்காட்டினாலோ, ஹிந்துக்களுக்கு பாதிப்பு என போராடினாலோ தடை விதித்துஜனநாயக உரிமையை நசுக்குகின்றனர்.நாடு முழுதும் அமலிலுள்ளபொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் மட்டும் அமலில் இல்லை. அனைத்து பாடதிட்டங்களிலும் திராவிடக் கொள்கைகள் திணிக்கப்படுகின்றன.வெளியில் கோயில்கள், அர்ச்சகர்கள், பிராமணப் பெண்கள், சிவாச்சாரியார்கள் ஆகியோரை அவமதித்துவிட்டு வீட்டிற்குள் ரகசியமாக பூஜை, பரிகாரம் செய்வது, அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டும் கோயிலுக்குச் செல்வது ஏமாற்று வேலை.இவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாகஹிந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்வரும் 2025, ஜன., 5ல் மதுரை பழங்காநத்தத்தில் காலை 9:00முதல் மாலை 5:00 மணி வரை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும். ஹிந்துக்கள் கோயிலுக்கு செல்வதை காட்டிலும் சனாதன தர்மத்தை பாதுகாக்க முன்நிற்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.தென்னிந்தியபார்வர்டு பிளாக் நிறுவனர்திருமாறன், பிள்ளைமார் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் ஆறுமுகம், அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாவட்ட பிராமண சேவா சமாஜ மாநில துணைத் தலைவர் கிருஷ்ணசாமி ராஜு, மாவட்டத் தலைவர் ரவி, அமைப்புச் செயலாளர் ஸ்ரீராமன், பழங்காநத்தம் கிளைத் தலைவர் விஸ்வநாதன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ