மேலும் செய்திகள்
பாலியல் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு
14-Jun-2025
மதுரை: மதுரை அக்ரி மற்றும்அனைத்து தொழில் வர்த்தக சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில்சைபர் குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. சங்கத் தலைவர் ரத்தினவேல் பேசுகையில் ''சைபர் குற்றங்களால் தொழில் வணிகத்துறை பொருள் நஷ்டத்திற்கும், வணிக நடவடிக்கைகளின் முடக்கத்திற்கும் உள்ளாகிறது. எனவே தொழில்செய்வோரும் இதை தெரிந்து கொள்ள வேண்டும்'' என்றார். வணிக நிறுவனங்களில் நிதி இழப்புகள், தகவல் இழப்புகளை ஏற்படுத்தும் சைபர் குற்றங்கள் குறித்து ஏ.டி.எஸ்.பி., ரமேஷ் பேசுகையில், ''மதுரை மாவட்டத்தில் கடந்தஆண்டு ரூ.6 கோடி பண மோசடி நடந்துள்ளது. தினமும் சராசரியாக 10 சைபர் குற்றங்கள் பதிவாகின்றன. பகுதி நேர வேலைவாய்ப்பு, வியாபாரம், பணம் டிபாசிட் செய்து பல மடங்காக திரும்பப்பெறுவது, டிஜிட்டல் கைது போன்ற பல வழிகளில் ஏமாற்றுகின்றனர்.பெரும்பாலும் பணமோசடி, தகவல் அபகரிப்பு, தனிமனித மானநஷ்டத்தின் கீழ் சைபர் குற்றங்கள் நடக்கின்றன'' என்றார். எஸ்.ஐ.,க்கள் கார்த்திகேயன், சுதர்சன் பேசினர். சங்க செயலாளர் திருப்பதிராஜன் நன்றி கூறினார்.
14-Jun-2025