| ADDED : பிப் 25, 2024 05:32 AM
மதுரை : மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது. எம்.பி.ஏ., துறைத்தலைவர் சுப்ரமணியன் வரவேற்றார். முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா பேசினர்.கல்லுாரித் தலைவர் டாக்டர் ஆர். லட்சுமிபதி தலைமை வகித்து, சிறந்த கற்றல் மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெற திறமைகளை சரியான முறையில் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து பேசினார். கலசலிங்கம் பல்கலை முதன்மையர் ரஜினி, கல்வி நடவடிக்கைகளுடன் திறன்களை மேம்படுத்த தேசிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவம், பணியிடங்களில் சிக்கல்களை தீர்க்கும் திறன் குறித்து பேசினார்.வெர்ஜினியா காமன்வெல்த் பல்கலை பேராசிரியர் ரத்தன் பட்டாச்சார்ஜி, திறமையான தலைமைத்துவத்திற்கான மனதின் திறன்களை வளர்ப்பது குறித்து பேசினார். கான்பூர் வி.எஸ்.எஸ்.டி., கல்லுாரி பேராசிரியை நீரு டாண்டன், தகவல் தொடர்பு திறன் மூலம் நேர்காணல் செய்பவர்களின் மனதை அறிந்து அதற்கேற்றவாறு பதில் அளித்து வெற்றி பெறுதல் குறித்தும், ஆங்கிலமொழி சரளமாக இல்லாததால் நேர்முகத்தேர்வில் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் பட்டியலிட்டார்.இரு நாட்கள் நடந்த கருத்தரங்கில் பெங்களூரு டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி ராம்பிரபு, பேராசிரியர்கள் பிரசன்ன வெங்கடேஸ்வரன், ஹில்டா ஜெயக்குமாரி பிரய்னி, ஷாலினி கடுவிலா, சுபாதினி ரமேஷ், ரோகித், ரம்யா சுதர்சன், ராதிகா, கிஷோர்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆய்வாளர்கள், மாணவர்கள் 104 பேர்ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தனர். ஏற்பாடுகளை உள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுகந்தி ஹெப்சிபா, ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.