உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறுநீரக நோய் கண்டறியும் முகாம்

சிறுநீரக நோய் கண்டறியும் முகாம்

திருச்சி : உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் இன்று(மார்ச் 15) நிறைவு பெறுகிறது.நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:டாக்டர்கள் கணேஷ் அரவிந்த், என்.கார்த்திகேயன் ஆகியோர் நோயாளிகளுக்கு இலவச ஆலோசனை வழங்குவார்கள். சர்க்கரை நோயால் ஏற்படும் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள், நோய்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. ரூ.1500க்கு பார்க்கப்படும் மருத்துவ பரிசோதனைகள் சலுகை விலையில் ரூ.500க்கு செய்யப்படுகிறது.முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, 24 மணி நேர ரத்த சுத்திகரிப்பு மற்றும் லேப்ராஸ்க்கோபி மூலம் டோனர் நெப்ரக்டமி சிகிச்சை அளிக்கப்படுகிறது. முகாமில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில் 75 பேர் மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர் என்றார்.முகாம் ஏற்பாடுகளை பி.ஆர்.ஓ., ஸ்டீபன், ஜெயபிரகாஷ், தியாகு, ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை