உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் கழிவுகள்; பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு * பதில் மனுத்தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு

 மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் கழிவுகள்; பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு * பதில் மனுத்தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான மாரியம்மன் தெப்பக்குளத்தில், கழிவுகள், குப்பை வராமல் தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து மாநகராட்சி கமிஷனர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், கோயில் நிர்வாக அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அனுப்பானடி ஈஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், தெப்பக்குளத்திற்கு குப்பை , கழிவுகள் கலந்த மாசுபட்ட நீர் வழங்குவதை தடுக்க வேண்டும். குளத்திற்கு தண்ணீர் வரும் பனையூர் கால்வாயை சுத்தம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் பனையூர் கால்வாயில் விலங்குகளின் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அருகில் உள்ள கடைகளின் குப்பை அனைத்தும் பனையூர் கால்வாயில் கொட்டுவதால் குப்பை தெப்பக்குளத்தில் குவிகிறது. இதனால் சுகாதார கேடு ,துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே பனையூர் கால்வாயின் பராமரிப்பிற்கு நீர்வளத் துறை பொறுப்பாகும். பனையூர் வாய்க்காலில் விலங்குகளின் கழிவுகளைக் கொட்டாமல் தடுப்பது மாநகராட்சியின் பொறுப்பு. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இந்த தெப்பக்குளத்தில், கழிவுகள், குப்பை வராமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் பதில் மனுதாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை