மேலும் செய்திகள்
பயிர்க்கடன் தாமதத்தால் பரிதவிக்கும் விவசாயிகள்
23 minutes ago
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
24 minutes ago
சுற்றுலாத்துறை பொங்கல் விழா
27 minutes ago
மாநகராட்சி குப்பை வரி சிறப்பு முகாம்
28 minutes ago
மதுரை : பிற மாநிலங்களை போல தமிழகத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய வணிக வளாக கூடங்கள் அமைத்து, விளையும் வேளாண் பொருட்களை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என உணவு பொருள் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியது.சங்க தலைவர் ஜெயப்பிரகாசம், கவுரவ செயலாளர் வேல்சங்கர் அரசுக்கு அனுப்பிய மனு:காய்கறி, கீரை, பழங்கள் முதல் நெல், அரிசி, கோதுமை, பயறு, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் முதலிய 300 உணவு பொருட்களுக்கு சீரான அறிவிக்கை பெயரில் செஸ் கட்டணம் விதிக்க வகை செய்யும் அரசு உத்தரவை(எண்: 361) ரத்து செய்ய வேண்டும். வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்படும் உணவு பொருட்களுக்கு செஸ் கட்டணம் வசூலிக்க கூடாது. நிலத்திலிருந்து விளைச்சல் மூலம் பெறப்படும் நேரடி வேளாண் விளைபொருட்களுக்கு மட்டும் செஸ் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
அவற்றிலிருந்து ஆலைத்தயாரிப்புகள் மூலம் பெறப்படும் உபபொருட்களுக்கு செஸ் கட்டணம் வசூலிக்க கூடாது. குறைந்தளவு வருவாய் ஈட்டும் மார்க்கெட் கமிட்டியில் லஞ்சத்திற்கு வழிவகுக்கும் நடைமுறையிலுள்ள பெர்மிட் முறையை நீக்க வேண்டும். இளநீர் நீங்கலான அனைத்து தேங்காய்களுக்கும் செஸ் கட்டணம் நீக்கப்பட வேண்டும். வேளாண் விளைபொருள் விற்பனை சட்டத்திலுள்ள குறைகளை நீக்க வேண்டும். வணிக, விவசாயிகளின் நீண்டகால பிரச்னையான மார்க்கெட் செஸ் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், என தெரிவித்து உள்ளனர்.
23 minutes ago
24 minutes ago
27 minutes ago
28 minutes ago