உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மதுரைக்கு மெட்ரோ ரயில் : வியாபாரிகள் வலியுறுத்தல்

 மதுரைக்கு மெட்ரோ ரயில் : வியாபாரிகள் வலியுறுத்தல்

மதுரை: மதுரை நுகர்பொருள் ஷாப் அண்ட் மொத்த வியாபாரிகள் சங்கத்தலைவர் மோகன் மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது: ஆன்மிக நகரான மதுரை தொழில் ரீதியாக வளர்ச்சி பெற்று வருகிறது. நகரில் வாகன போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. இந்நகரின் எளிதான போக்குவரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் அவசியம். ஆனால் மதுரையின் மக்கள் தொகையை காரணம் காட்டி மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கையை மத்திய அரசு மாநில அரசிடம் கேட்டுள்ளது. தமிழகத்தின் அரசியல் தலைநகரான மதுரையின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். மதுரை விமான நிலையத்தில் ஓடுபாதையை விரிவாக்கம் செய்யும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். இரு நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்து ஒப்பந்தத்தில் மதுரையையும் இணைத்து முக்கிய வெளிநாடுகளுக்கு சர்வதேச விமானங்களை இயக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி