மதுரை: பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான ஓபன் சிலம்பப் போட்டியில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1300 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மதுரை ரைசிங் சாம்பியன்ஸ் பயிற்சி கூட மாணவர்கள் 42 பதக்கங் களுடன் சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றினர். ஒற்றை கம்பு சப் ஜூனியர் பிரிவில் பத்திரி நாத் முதல் பரிசு, விமலேஷ் 2ம் பரிசு, சிவதரன், புவியரசு, கனிஷ்கா 3ம் பரிசு வென்றனர். கேடட் பிரிவில் கிரித்திக் ரோஷன் முதல் பரிசு, தேசபிரியன் 2ம் பரிசு, லேவின் லிதேஷ், லேஜ்வந்தன், அமிழ்தன் 3ம் பரிசு வென்ற னர். ஜூனியர் பிரிவில் ஸ்ரீருத்ரவேல் முதல் பரிசு, சக்திவேல் 2ம் பரிசு, நவீன்ராஜ், ஆகாஷ், கதிர்வேல், ஜெகதீஷ் 3ம் பரிசு பெற்றனர். சீனியர் பிரிவில் லியோ ரிச்சர்ட் முதல் பரிசு, தயா 2ம் பரிசு, சர்வேஸ்வரன், லோஹித், காவியவர்மன், தானிஷ்குமார் 3ம் பரிசு வென்றனர். இரட்டை கம்பு சப் ஜூனியர் பிரிவில் சஸ்வந்த் முதல் பரிசு, ஸ்ரீ சுகிர்தன் 2ம் பரிசு வென்றனர். கேடட் பிரிவில் சஞ்சய் ராஜன் முதல் பரிசு, ஜோபிசிபின் 3ம் பரிசு பெற்றனர். பெண்கள் ஜூனியர் பிரிவில் ஹர்ஷினி, ஆண்கள் சீனியர் பிரிவில் ஜெயசுதன் முதல் பரிசு வென்றனர். இரட்டை கம்பு ஓப்பன் ஆண்கள் பிரிவில் மணிமாறன், பெண்கள் பிரிவில் மெமினாபேகம் முதல் பரிசு வென்றனர். தொடுமுறை போட்டி சப் ஜூனியர் பிரிவில் பரணிதரன் முதல் பரிசு, மாமலைவாசன் 2, துருவபாலா 3ம் பரிசும், கேடட் பிரிவில் ஹரிஷ் முதல் பரிசு, யோகேஷ் வருண் 2ம் பரிசு, தஸ்வந்த் 3ம் பரிசு வென்றனர். ஜூனியர் பிரிவில் கருப்பசாமி முதல் பரிசு, வெற்றிமாறன் 2ம் பரிசு, சிக்கிதரன் 3ம் பரிசும், ஆண்கள் சீனியர் பிரிவில் அஸ்வின் முதல் பரிசு, கதிர்வேல் 2ம் பரிசு, பெண்கள் சீனியர் பிரிவில் கீர்த்தனா முதல் பரிசும் வென்றனர். பயிற்சிகூடத்தலைவர்கள் சுந்தரக்கண்ணன், சரவணன், ஜான் சந்திரமோகன், பயிற்சியாளர் கவுரிசங்கர், துணை பயிற்சியாளர்கள் கார்த்திகேயன், கேசவன், மதன் பாராட்டினர்.