* சேதமடைந்த பாலம்
மதுரை மாநகராட்சி 98 வது வார்டு - திருநகர் 99 வது வார்டு பாலசுப்பிரமணியன் நகர் இணைக்கும் பாலம் சேதமடைந்துள்ளது. விபத்து நடக்கும்முன் சரிசெய்ய வேண்டும். -- முத்துகுமாரசாமி, பாலசுப்பிரமணியன் நகர். * மாடுகளால் தொல்லை
மதுரை மாநகராட்சி 47 வது வார்டு தெற்கு மாரட் வீதியில்அப்பகுதி மார்க்கெட் கழிவுகளை ரோட்டில் கொட்டுகின்றனர். இதனால் மாடுகள் அதிகம் உலா வந்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. -நடவடிக்கை தேவை. - ஜாபர்அலி, தெற்குவாசல். * குப்பையை அகற்ற வேண்டும்
மதுரை மாநகராட்சி 23 வார்டு தாகூர் நகர் பகுதி மெயின் ரோட்டில் குப்பை அள்ளப்படாமல் உள்ளது. தொற்று நோய் அபாயத்தில் உள்ளோம். நடவடிக்கை தேவை. -- சந்தனகுமார், கீழகைலாசபுரம். * ரோட்டில் கழிவுநீர்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு கோபுர தெருவில் ஒரு மாதமாக ரோட்டில் சாக்கடை நீர் ஓடுகிறது. நடந்து செல்ல முடியவில்லை. உடனடி நடவடிக்கை தேவை. -- சாமிநாதன், மதுரை. * விலையில்லா வேட்டி எங்கே
மதுரை கான்பாளையம் 1வது தெரு ரேஷன் கடையில் அரசு வழங்கும் இலவச வேட்டி சேலை இதுவரை வழங்கவில்லை. அதிகாரிகள் உடனடியா வழங்க வேண்டும்.- ஜெயராம், கான்பாளையம். * நாய்கள் தொல்லை
மதுரை மாநகராட்சி சிங்காரத்தோப்பு பகுதியில் நாய்கள் தொல்லை அதிகம். குறிப்பாக மெயின் வீதியில் குட்டிகளை ஈன்ற நாய் அவ்வழியாக செல்வோரை விரட்டி கடிக்கிறது. இதனால் அந்த வீதியில் நடந்து செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர்.- சரவணன், சிங்காரத்தோப்பு.