உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அண்டாவை காணவில்லை என்பது போல ஆறு, நீர்வழிப்பாதையை காணவில்லை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் கிண்டல்

அண்டாவை காணவில்லை என்பது போல ஆறு, நீர்வழிப்பாதையை காணவில்லை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் கிண்டல்

மதுரை : மதுரையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் 39 ஆயிரத்து 202 ஏரிகள் உள்ளன. இன்று தமிழகம் முழுவதும் மணல், கனிம வளக் கொள்ளை நடக்கிறது. அவர்களிடம் இருந்து ஏரிகளையெல்லாம் பாதுகாக்க முடிகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. நான்கரை ஆண்டு முதல்வராக இருந்த பழனிசாமி ஆட்சியில் குடிமராமத்து திட்டம் மூலம் ரூ.1,132 கோடியில் 5 ஆயிரத்து 586 நீர்நிலைகளை துார்வாரினோம். 84 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையை துார்வாரி சாதனை படைக்கப்பட்டது. காவிரி துார் வாரும் திட்டத்தை செயல்படுத்தி கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் காவிரி ஆற்றிலே விட செய்தோம். நுாறாண்டு கனவு திட்டமான காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை ரூ.14 ஆயிரத்து 400 கோடியில் முதல்வராக இருந்த பழனிசாமி துவக்கி வைத்தார். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ரூ.1651 கோடியில் செயல்படுத்தினார். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உருவாக்கினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=svdquvoe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பழனிசாமி நிறைவேற்றிய குடிமராமத்து திட்டத்தை ரத்து செய்ததால் இன்று பல ஏரிகள் துார்வாரப்படவில்லை. அண்டாவை காணோம், குண்டாவை காணோம், கிட்னியை காணோம் என்பது போல இன்று ஆறுகளை காணவில்லை, நீர்வழிப்பாதைகளை காணவில்லை. இந்த ஆட்சியிலே என்ன நடக்கிறது என முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லையா, தெரிந்தும் தெரியாமல் நடிக்கிறாரா. இன்று 2 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளோம் என்கின்றனர். கட்சி பலவீனம் அடைந்து, தொண்டர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். ஓரணியில் தமிழகம் என 2 கோடி அல்ல, 10 கோடி உறுப்பினர்களை அறிவித்தாலும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. கொடுத்த 525 தேர்தல் வாக்குறுதிகளில், 10 சதவீதத்தைக் கூட முதல்வர் நிறைவேற்றவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை