மதுரை : மதுரை கோட்டத்தில் 40 ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ளூர் பொருட்களின் விற்பனை நிலையங்களை பிரதமர் மோடி நாளை (மார்ச்12) காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்.மதுரை கோட்டத்தில் தேனி, போடிநாயக்கனுார், திண்டுக்கல், மணப்பாறை, கொடைக்கானல் ரோடு, பழநி, ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, கொட்டாரக்கரை, புனலுார், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரம், கடையநல்லுார், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், சாத்துார், ராஜபாளையம், கோவில்பட்டி, துாத்துக்குடி, திருச்செந்துார், குரும்பூர், வாஞ்சி மணியாச்சி, நாசரேத், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, ராமநாதபுரம் மண்டபம், ராமேஸ்வரம், பரமக்குடி ஸ்டேஷன்களில் உள்ளூர் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக நவீன நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களையும், தேனி, அம்பாசமுத்திரம், கங்கைகொண்டான் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் அமைக்கப்பட்டுள்ள நவீன சரக்கு ரயில் முனையங்களையும் பிரதமர் நாளை துவக்கி வைக்கிறார். பிரதம மந்திரி பாரதிய ஜன உஷாதி கேந்திரா திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்க திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் மருந்து விற்பனை நிலையத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.