உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பேரையூரில் பதநீர் சீசன் துவக்கம்

பேரையூரில் பதநீர் சீசன் துவக்கம்

பேரையூர் : பேரையூர், சந்தையூர், மேலப்பட்டி, தும்மநாயக்கன்பட்டி, சந்தையூர், வண்டாரி பகுதிகளில் பதநீர் சீசன் துவங்கி உள்ளது.பதநீர் சீசனையொட்டி காட்டுப் பகுதிகளில் குடில் அமைக்கும் பணிகளில் பனைத்தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உடலுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து கிடைப்பதுடன், குளிர்ச்சி, மருத்துவ குணம் நிறைந்ததாக பதநீர் உள்ளது. இப்பகுதியில் 10 நாட்களாக பதநீர் இறக்கும் தொழில் முழுவீச்சில் நடக்கிறது.பனைமரங்கள் நிறைந்த பகுதியில் தற்காலிக குடில் அமைத்து கருப்பட்டி காய்ச்சும் தொழிலில் குடும்பத்தினருடன் ஈடுபட துவங்கியுள்ளனர். சாலையோரங்களில் குடங்களில் பதநீரை விற்று வருகின்றனர். ஒரு டம்ளர் ரூ.10. ஒரு செம்பு பதநீர் ரூ.30 என விற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை