உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மானாவாரி பகுதியில் துவங்கியது நெல் அறுவடை

மானாவாரி பகுதியில் துவங்கியது நெல் அறுவடை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் மானாவாரி கண்மாய் பகுதிகளில் சாகுபடி செய்த நெல் அறுவடை துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பரங்குன்றம் பகுதியில் வேடர் புளியங்குளம், தென்பழஞ்சி உள்பட பல்வேறு மானாவாரி கண்மாய்கள் உள்ளன. இந்தாண்டு நல்ல மழை பெய்ததால் அப்பகுதி கிணறுகள், ஆழ் குழாய்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. அவ்வாறு தண்ணீர் இருந்த விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டனர். ஆரம்பத்திலேயே நெல் நடவு செய்தவர்கள் நிலங்களில் தற்போது நெல் விளைந்து அறுவடைக்கு தயாராகி விட்டது. இதையடுத்து பல விவசாயிகள் அறுவடை பணிகளைத் துவங்கியுள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், ''இந்தாண்டு நல்ல மழை பெய்ததால் நம்பிக்கையுடன் துவக்கத்திலேயே நெல் பயிரிட்டோம். தற்போது அறுவடைக்கு தயாராகி விட்டது. உடனே பணிகளை துவக்கியதால் மகிழ்ச்சி'' என்றனர்.தொடர்ந்து மழை பெய்ததால் பலரது நிலங்கள் ஈரப்பதத்துடன் உள்ளது. அதனால் நெற்கதிர்களை இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். பலர் ஆட்கள் மூலமே அறுவடை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை