| ADDED : நவ 26, 2025 05:13 AM
மேலுார்: மேலுாரில் இருந்து கொட்டகுடிக்கு செல்லும் பெரியாற்று கால்வாய் தடுப்புச் சுவர் இடிந்து ரோட்டில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். கள்ளந்திரி -- குறிச்சிப்பட்டி வரை பெரியாறு 12வது பிரதான கால்வாய் செல்கிறது. இதில் நொண்டிகோவில்பட்டியில் இருந்து 9 கி.மீ., தொலைவில் உள்ள கொட்டகுடிக்கு மேலுார் நகரின் மையப்பகுதியில் 6வது கால்வாய் வழியாக தண்ணீர் செல்கிறது. பாசன கால்வாயின் ஒரு பகுதியில் சேனல் ரோடும் மறுபகுதியில் உள்ள ரோட்டில் வங்கிகள், மருத்துவ மனையும் செயல்படுகிறது. தவிர தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், நொண்டி கோவில் பட்டி, கோமதியாபுரம், சொக்கம்பட்டி உள்ளிட்ட வார்டுகளின் இணைப்பு சாலையாகவும் உள்ளது. அலுவலகத்திற்கு அருகே ரோட்டோரத்தில் உள்ள பாசன கால்வாயினுள் உள்ள கான்கிரீட் தடுப்புச் சுவர் பராமரிப்பின்றி இடிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.