உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பூச்சி மருந்து தெளிப்பு துவக்கம்

 பூச்சி மருந்து தெளிப்பு துவக்கம்

பாலமேடு: பாலமேடு பகுதிகளில் மா மரங்களை பூச்சித் தாக்குதலில் இருந்து காக்க பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி துவங்கி உள்ளது. இங்குள்ள மலை அடிவார பகுதிகளில் பல நுாறு ஏக்கரில் மா பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் மாங்காய், பழங்களை அருகில் முடுவார்பட்டி சந்தை, திண்டுக்கல், மதுரை சந்தைகளில் விற்பதும், அங்கிருந்து வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. தற்போது மா மரங்கள் பூக்க துவங்கியுள்ளன. பெரும்பாலான மரங்களை பூச்சிகள் தாக்க துவங்கியுள்ளதால் விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சரந்தாங்கி புகழ் மணி கூறியதாவது: விரியன் பூச்சி எனப்படும் புழுக்கள் காணப்படுகின்றன. இவை இலை, பூக்களை சேதப்படுத்தும். பிஞ்சுகளை முழுமையாக உண்ணும். அதிக மழை பெய்தால் பூக்கள், பிஞ்சுகள் கருகிவிடும். இந்தாண்டு கடும் பனி இருப்பதால் ஜனவரிக்கு முன்பே மருந்து தெளிப்பை துவங்கியுள்ளோம். இருபது நாட்களுக்கு ஒரு முறை மருந்து தெளிக்கிறோம். பூச்சி அதிகரித்தால் 15 நாளுக்கு ஒரு முறை மருந்து தெளிப்போம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி