உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கவிதைப் பயிலரங்கம்

கவிதைப் பயிலரங்கம்

மதுரை : மதுரை கீழக்குயில்குடி சமணர்மலை அடிவாரத்தில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், சான்லாக்ஸ் பன்னாட்டு ஆய்விதழ் சார்பாக கல்லுாரி மாணவர்களுக்கு கவிதைப் பயிலரங்கம் நடந்தது. மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் செல்லா தலைமை வகித்தார். சான்லாக்ஸ் பதிப்பாசிரியர் லட்சுமணன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் முருகேசபாண்டியன் துவக்கி வைத்தார். வரலாற்றாளர் அரிச்சந்திரன், கவிஞர்கள் லிபி ஆரண்யா, சக்திஜோதி, செல்லா, பேனா மனோகரன், பேராசிரியர் ஆனந்தகுமார், கலை இலக்கியப் பெருமன்ற மாநில பொதுச் செயலாளர் அறம் பேசினர். ஏற்பாடுகளை முத்தையா, சரவணன், தமிழ் சிவா, தமிழரசன், கிறிஸ்டோபர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !