உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.1.17 கோடி பணிக்கு பூஜை

ரூ.1.17 கோடி பணிக்கு பூஜை

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் பாறைப்பட்டி ஊராட்சி சரந்தாங்கி, சேந்தமங்கலம் ஊராட்சி பொந்துகம்பட்டி, ராஜக்காள்பட்டி ஊராட்சி மறவபட்டி, கீழச்சின்னணம்பட்டி ஊராட்சியில் புதிய சிமென்ட் களம், பேவர் பிளாக் சாலை, ரேஷன் கடை, மயானம், ஊராட்சி அலுவலக கட்டடம் அமைக்க ரூ.1 கோடியே 17 லட்சம் பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. பணிகளை வெங்கடேசன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயலட்சுமி, சின்னம்மாள், பழனிச்சாமி, துணை தலைவர் தர்மராஜா வரவேற்றனர். ஆனையூர் பகுதி கழகச் செயலாளர் மருது, ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, யூனியன் கமிஷனர்கள் பிரேமராஜன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, துணை தலைவர் சுவாமிநாதன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை