உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மருத்துவமனை முன் மழைநீர்

 மருத்துவமனை முன் மழைநீர்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அரசு மருத்துவமனை முன் தேங்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 40 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் மருத்துவமனை முன் நுழைவாயிலில் 'பேவர் பிளாக்' கற்கள் பாதித்த சாலையில் மழைநீர், கழிவு நீருடன் தேங்குகிறது. இதனால் இவ்வழியாக செல்ல நோயாளிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் தேங்கும் மழைநீர் கொசு உற்பத்தி மையமாக மாறியுள்ளது. மருத்துவமனை முன் கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை