உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசியலுக்கு அப்பாற்பட்டவர் ராமர் வெங்கையா நாயுடு கருத்து

அரசியலுக்கு அப்பாற்பட்டவர் ராமர் வெங்கையா நாயுடு கருத்து

மதுரை : ''ராமர் அரசியலுக்கும் அப்பாற்பட்டவர். தலைவர்களின் பெயரிலும் ராம் என்பது உள்ளது,'' என முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வெங்கையா நாயுடு மதுரை விமான நிலையத்தில் கூறியதாவது:அயோத்தி ராமர் கோவில் திறப்பின் மூலம் 500 ஆண்டுகால போராட்டம் வெற்றியில் முடிந்துள்ளது. ராமர் மதத் தலைவர் அல்ல. ராமர் இந்திய நாகரிகம், கலாசாரத்திற்கான நம்பிக்கை. அவர் சிறந்த ஆட்சியாளர், சிறந்த கணவர், சிறந்த மகன். கடுமையான சூழலிலும் சத்தியத்தின் வழி நின்றவர். தமிழகத்தின் முக்கிய தலைவர்களின் பெயரிலும் ராம் என்பது உள்ளது. உதாரணமாக ஈ.வெ.ராமசாமி, எம்.ஜி.ராமச்சந்திரன், கர்நாடக முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, முன்னாள் ஆந்திரா முதல்வர் என்.டி.ராம ராவை கூறலாம்.கடவுளை நம்பாத கட்சித் தலைவர்களில் சீதாராம் யெச்சூரி பெயரிலும் ராம் உள்ளது. பல தலைவர்களின் பெயர்களில் ராம் என்ற பெயர் உள்ளது. அதற்கு மதம் மட்டும் காரணமல்ல. கலாசார மதிப்பு, ராமர் காட்டிய நல்வழிதான் காரணம். லோக்சபா தேர்தலுக்கும், அயோத்திக்கும் சம்பந்தம் இல்லை.ஒரு சிலர் அப்படி நினைக்கின்றனர். ராமர் அரசியலுக்கும் அப்பாற்பட்டவர். ஒரு கட்சிக்கு சொந்தமானவர் அல்ல. ராமராஜ்ஜியம் அமைய வேண்டும் என்றார் மகாத்மா காந்தி. ராமராஜ்ஜியத்தில் ஊழல், சுரண்டல், அடாவடித்தனம், ஜாதி, மத ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாகும் என்பதே அர்த்தம்.எனவே ராமராஜ்ஜிய திசையை நோக்கித்தான் செயல்பட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி