உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 99 நாட்களில் ரூ.17.85 லட்சம் அபராதம் வசூல்

99 நாட்களில் ரூ.17.85 லட்சம் அபராதம் வசூல்

மதுரை: உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீசார் இணைந்து பெட்டிக் கடைகளில் நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்டபுகையிலை வைத்திருந்த கடைகளுக்கு ரூ 17.85 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.நவ.24 முதல் பிப். 29 வரை உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து பெட்டிக் கடைகள் மற்றும் வாகனங்களில் தடை செய்த புகையிலை பொருட்கள் உள்ளதா என சோதனை நடத்தினர். 283 பெட்டி கடைகளில் 677 கிலோ எடையுள்ள ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பாக 277 கடைகளுக்கு ரூ.17. 85 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 238 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: பெட்டிக் கடைகளில் முதன்முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாட்கள் கடை மூடப்படும். 2வது முறை தவறு செய்தால் ரூ.50ஆயிரம் அபராதம் ஒரு மாதம் வரை சீல் வைக்கப்படும். 3வது முறையும் தவறு செய்தால் ரூ.ஒரு லட்சம் அபராதம் மூன்று மாதங்களுக்கு கடைக்கு சீல் வைக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை