உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  டூவீலரில் பதுங்கிய பாம்பு

 டூவீலரில் பதுங்கிய பாம்பு

சோழவந்தான்: சோழவந்தானைச் சேர்ந்த கணேஷ் பாண்டி 47, தனது டூவீலரில் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். சோழவந்தான் ஸ்டேட் வங்கி அருகே சென்றபோது டூவீலருக்குள் இருந்த பாம்பு 'ஹேண்ட்பார்' அருகே தலையை நீட்டியுள்ளது. சுதாரித்துக் கொண்ட அவர் வண்டியை நிறுத்தி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். வீரர்கள் டூவீலரை தீயணைப்பு நிலையத்திற்கு எடுத்துச் சென்று சோதனையிட்டதில் 'டூல்ஸ் பாக்சில்' கொம்பேறி மூக்கன் பாம்பு இருந்துள்ளது. அதனை மீட்ட வீரர்கள் வனப்பகுதிக்குள் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி