உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நிலஅளவையர் காத்திருப்பு போராட்டம்

 நிலஅளவையர் காத்திருப்பு போராட்டம்

மதுரை: காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் மதுரையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. களப்பணியாளர்களின் அனைத்து பராமரிப்பு பணிகளையும் கருத்தில் கொண்டு, இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதலில் பணிகுறியீட்டை குறைக்க வேண்டும், துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை வலி யுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் திவ்யா வரவேற்றார். செயலாளர் ரகுபதி, துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், வருவாய்த்துறை அலுவலர் முகைதீன் அப்துல்காதர் உட்பட பலர் பங்கேற்றனர். வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் முருகையன் சிறப்புரை நிகழ்த்தினார். நிலஅளவை அலுவலர் ஒன்றிப்பு மாவட்ட பொருளாளர் மணி கண்டன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை