உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மூன்று மாதங்களுக்கு பின்பு சுவாமி புறப்பாடு

மூன்று மாதங்களுக்கு பின்பு சுவாமி புறப்பாடு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூன்று மாதங்களுக்கு பின்பு நேற்று கார்த்திகை தினத்தை முன்னிட்டு சுவாமி, தெய்வானை வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.கோயிலில் வழக்கமாக மாத கார்த்திகை அன்று மாலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.கோயிலில் கும்பாபிஷேகம் துவங்கும் வகைகளில் ஏப். 10ல் பாலாலயம் நடத்தப்பட்டது. அப்போது முதல் கோயிலுக்குள் கும்பாபிஷேக பணிகள் நடந்ததால் கார்த்திகை தினத்தன்று சுவாமி வீதி உலா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

சுவாமி புறப்பாடு

கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு ஆடி கார்த்திகையை முன்னிட்டு நேற்று காலை கோயிலில் இருந்து உற்ஸவர்கள் புறப்பாடாகி சன்னதி தெருவில் உள்ள ஆடி கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு மாலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரமாகி, பூஜை முடிந்து தங்கமயில் வாகனத்தில் ரத வீதிகளில் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை