உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  காட்சிப்பொருளான மருத்துவமனை

 காட்சிப்பொருளான மருத்துவமனை

மேலுார்: மேலுாரில் கால்நடை மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் சிதிலமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. 1965 முதல் இம்மருத்துவமனை செயல்படுகிறது. மெயின் ரோடு உயரமாக இருப்பதால் மழை நீர் மருத்துவமனை வளாகத்தில் தேங்கி கிடக்கிறது. இதே வளாகத்தில் ரூ. 90 லட்சத்தில் புதிய மருத்துவமனை கட்டப்பட்டதோடு சரி இதுவரை திறக்கப்படவில்லை. விவசாயிகள் கூறியதாவது: சிதிலமடைந்த ஓட்டு கொட்டகையில் மருத்துவமனை செயல்படுவதால் அச்சத்துடனே வந்து செல்கிறோம். மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுவதால் கால்நடைகள், மக்கள் வழுக்கி விழுந்து காயமடைகிறோம். தேங்கிய நீரில் கொசு உற்பத்தியாகி தொற்று நோய்களுக்கு ஆளாகிறோம். தவிர புதிய மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராததால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ